Categories: சினிமா

காதல் தோல்வியில் ‘குட் நைட்’ மணிகண்டன்.! ‘லவ்வர்’ படத்தின் டீசர் இதோ.!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர்தான் மணிகண்டன். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தன்னை கதாநாயகனாக தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘லவ்வர்’. இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பின்னர் திரைப்படங்களில் துணை வேடங்கள் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். ‘விக்ரம் வேதா’ படத்தில் நடிகராகவும் வசனகர்த்தமாகவும் தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், இன்று தமிழின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

காதல் தோல்வியில் 'குட் நைட்' மணிகண்டன்.! 'லவ்வர்' படத்தின் டீசர் இதோ.! 1
இவர் ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘காலா’, ‘சில்லு கருப்பட்டி’, ‘பாவக் கதைகள்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த ஒரு திரைப்படம் என்று சொன்னால் அது ‘ஜெய் பீம்’ படம் தான். இந்தப் படத்தில் ராஜாக்கண்ணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் பலரின் மனங்களை கொள்ளைக் கொண்டார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ‘சைத்தான்’, ‘மத்தகம்’ போன்ற பல வெப் சீரிஸ்க்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ‘லவ்வர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில், ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார் மணிகண்டன். இந்தப் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கிறார். இவர் 2018ம் ஆண்டு மிஸ் ஹைதராபாத் பட்டத்தை வென்றவர் ஆவார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்