நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

தமிழ் உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் எழுதி, இயக்கும் ‘நிலவுக்கு என்னடி என் மேல் கோபம்’ என்கிற படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இளம் நடிகர்களாக இருக்கும் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் போன்ற பல முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரபல இயக்குனரான கஸ்தூரிராஜாவின் மகன்தான் தனுஷ். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையில் நடிகராக தனது வாழ்க்கையைத தொடங்கி இன்று ஹாலிவுட் வரை நடித்து மிகப்பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது 1
இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய “ஊன்டர்பார் பிலிம்ஸ்” நிறுவனம் சார்பில் தற்போது தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ என்கிற திரைப்படம். இந்த படத்தில் இளம் நடிகர்களான பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தன்னுடைய “ஊன்டர்பார் பிலிம்ஸ்” நிறுவனம் சார்பில் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா இந்த படத்தை தயாரிப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் எடிட்டிங் பணிகளை ஜிகே பிரசன்னாவும். ஒளிப்பதிவு பணிகளை லியோன் பிரிட்டோ ஆகியோர் கவனத்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஐ லவ் யூ டா அமீர்.! அமீரை கட்டிபிடித்து தன் காதலை வெளிப்படையாக சொன்ன பாவனி. !

நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது 3
இந்த நிலையில் படத்தின் முதல் மோஷன் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நல்ல வரவேற்பு கிடைத்துவரும் அந்த படத்தின் மோஷன் போஸ்டரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Wunderbar Films

விளம்பரம்

Leave a Comment