நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது இந்த படம் குறித்த விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து பின்பு எம்எல்ஏ வரை பதவி உயர்வு பெற்றவராக வடிவேலு நடித்திருக்கிறார். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் சம வாய்ப்பு வழங்கப்படாததால் அதை எதிர்த்து போராடும் ஒரு இளைஞராக இருக்கிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்து கோபம் கொள்ளும் அவர், எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கு இறுக்கமான முகத்துடன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து பார்த்தோம் என்றால் முதல் பாதியில் கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தலையில் கல் ஒன்று வந்து விழும் அந்த காட்சி மிக அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வடிவேலு ஒரு மலை மீது ஏறி நின்று பேசும் காட்சிகளும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பு இந்த படத்திற்கு பலமாக அமைந்திருந்தது. இடைவேளை காட்சியின் போது தியேட்டரே கைதட்டும் அளவிற்கு கிளைமாக்ஸ் காட்சி போல அந்த இடைவேளை அமைந்திருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் வேறு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகம் ஒட்டாமல் வேறு கதையில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமான மொக்க மசாலா படம் போல ஹீரோவிற்கும் வில்லனுக்குமான சண்டையாக இரண்டாம் பாகம் இருந்தது. ஒரு கவுன்சிலருக்கு கூட நான்கு அடியாட்கள் இருக்கும் நிலையில் எந்தவித துணையும் இல்லாமல் எம்எல்ஏ வடிவேலு தனியாக ஒரு வீட்டில் இருக்கிறார்.

நான் மக்களுக்கு அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்லுபவர் ஒரு தடவை கூட மக்களை சந்தித்தது போல காட்சிகள் இல்லை. இலவச கல்வி மையம் நடத்தும் ஹீரோயின் ஒரு முறை கூட கல்வி மையத்திற்கு வந்தது போல் தெரியவில்லை. ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் எல்லாம் தேவையில்லாமல் இருந்தது. ஜாதி மோதல்களை வைத்து படம் எடுத்தால் மட்டும் ஜாதி பிரச்சனை தீராது, இது இரண்டு சமூகத்திற்கு கொம்பு சீவிவிடும் முறையாகத்தான் இருக்கும். இந்த படம் ரெண்டு கட்டான் படமாக இருந்தது. ஜாதி படமாகவும் இல்லை, அரசியல் படமாகவும் இல்லை. ஏ ஆர் ரகுமானின் மியூசிக் முதல் பாதியில் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இரண்டாம் பாதியில் அது கை கொடுக்கவில்லை. தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு ஒரு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆனால் இந்த படம் அது போல் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அவரின் அந்த முழு வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies