Categories: சினிமா

பறை இசைத்துக்கொண்டே வெறித்தனமாக ஆடிய கீர்த்தி சுரேஷ்.! மாமன்னன் படத்தின்அடுத்த சிங்கிள் இதோ.!

வெளியிட்டது

மாமன்னன் படத்தில் இருந்து “கொடி பறக்குற காலம்” என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடகி கல்பனா, சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட ரக்‌ஷிதா, தீப்தி, அபர்ணா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் தான் மாமன்னன். 2021ம் ஆண்டு கர்ணன் படத்திற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். மாரி செல்வராஜின் படைப்புக்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதாலும், சமூக அக்கறை கொண்ட மற்றும் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசுவதாலும் இவரின் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் மாமன்னன் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பறை இசைத்துக்கொண்டே வெறித்தனமாக ஆடிய கீர்த்தி சுரேஷ்.! மாமன்னன் படத்தின்அடுத்த சிங்கிள் இதோ.! 1

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருவதால் படத்திற்க்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. கடந்த மார்ச் 2022ம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கப்பட்டது. ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. தற்போது படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியாகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் கை வண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் தரமாக வந்துள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தப் பாடலாக கொடி பறக்குற காலம் என்கிற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை பாடகி கல்பனா மற்றும் சூப்பர் சிங்கர் பாடகிகளான ரக்‌ஷிதா, தீப்தி, அபர்ணா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை காண..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்