தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் 2வது சிங்கிள் “ரெண்டு ராஜா” பாடல் வெளியானது.!

நானே வருவேன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான ரெண்டு ராஜா என்ற பாடலை தனுஷே எழுதி பாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கி பெரும் “நானே வருவேன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். இந்தப் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா குரலில் “வீரா சூரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் சமீபத்தில் டீசர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் 2வது சிங்கிள் "ரெண்டு ராஜா" பாடல் வெளியானது.! 1

விளம்பரம்

டீசரில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியானது. மேலும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாவதால் அதற்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. தெலுங்கில் “நேனே வஸ்துன்னா” என்ற பெயரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற வெற்றி படங்களில் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்து இருந்தார்.

தொடர்புடையவை  "படத்துல சண்டை இல்ல.. சண்டைல தான் படமே இருக்கு"!! யானை படத்தின் நியூ ப்ரோமோ வீடியோ!!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் 2வது சிங்கிள் "ரெண்டு ராஜா" பாடல் வெளியானது.! 3

விளம்பரம்

தற்போது மீண்டும் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “ரெண்டு ராஜா” வெளியாகியிருக்கிறது இந்த பாடலை தனுஷே எழுதி பாடியிருக்கிறார். அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment