சித்துவை ஏமாற்றி மங்களூருவில் இருந்து கோவாவுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயா..!

மங்களூருவில் மச்சினிச்சி வீட்டுக்கு சென்ற சித்துவை ஏமாற்றி, கோவா வரை அழைத்துச் சென்றுள்ளார் ஸ்ரேயா. அந்த வீடியோவை தற்போது அவர்கள் தங்கள் youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றனர். ராஜா ராணி 2 என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துவருபவர் சித்து. இவரது மனைவி ஸ்ரேயா. இருவரும் இணையத்தைக் கலக்கி வரும் தம்பதிகள். இருவரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர்கள். சித்து சந்தோஷ் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரேயா ஜனனி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார்கள்.நிஜத்திலும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்துவை ஏமாற்றி மங்களூருவில் இருந்து கோவாவுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயா..! 1

விளம்பரம்

மிக க்யூட் ஜோடிகளான இவர்கள் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சித்துவும் ஸ்ரேயாவும் படு பிஸியாக நாடகங்களில் நடித்து வருகின்றனர். சித்து, ராஜா ராணி சீசன் 2 வில் விஜய் டிவியில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை வைத்துள்ளனர். அதில் பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

தொடர்புடையவை  ஆதி குணசேகரன் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு..! எதிர்நீச்சல் குடும்பத்துக்கு கிடைத்த மாஸ் அப்டேட்.!

சித்துவை ஏமாற்றி மங்களூருவில் இருந்து கோவாவுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயா..! 3

விளம்பரம்

 

இந்த நிலையில் மங்களூர்வில் இருக்கும் தனது மாமியார் மற்றும் மச்சினிச்சியின் வீட்டிற்கு சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கறி விருந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அங்கிருக்கும் பல கோவில்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். தற்போது ஸ்ரேயா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் மங்களூரில் இருந்து கோவாவிற்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என்று சொல்லி, கூகுள் மேப்பை பார்த்து 7 மணி நேரம் டிராவல் செய்து கோவாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஸ்ரேயா. அந்த வீடியோ மிக காமெடியாக உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை பார்க்க.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment