மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து மிக டென்ஷனாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நாள் தொடங்கி, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகி கலமையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. முதல் பாதி நன்றாக இருந்தது என்றும் இரண்டாவது பாதி மிக மெதுவாக சென்றதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி இருந்தது.

இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் அப்போது ஜெயிலர் படமும் வெளியாக இருந்ததால் அதன் உடன் போட்டி போட முடியாத சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே தற்போது படக் குழுவினர் படத்தை ரிலீஸ் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் படத்தை பார்த்து விட்ட வெளியே வந்த பலரும் படம் சுமாராக இருந்ததாகவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவீரன் படத்தின் முதல் ஷோ இன்று காலை 9 மணிக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பே youtube-ல் பப்ளிக் ரிவ்யூ என்கிற பெயரில் பல வீடியோக்கள் வரத் தொடங்கியிருந்தது. Thumb Nail-ல் என்னடா படம் இது படமா? என்று கேட்பது போல படம் நன்றாக இல்லை என்று மக்கள் கூறுவது போன்ற முகப்பு படத்தை வைத்திருந்தனர். இதையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது twitter பக்கத்தில் பகிர்ந்து, “எங்க இருந்துடா வரீங்க? படமே இன்னும் ஆரம்பிக்கல.!
ஒன்பது மணிக்கு தான் ஷோவே, அதுக்குள்ள பப்ளிக் ரிவ்யூ எப்புர்ராராரா?என்று அதை பகிர்ந்து இருக்கிறார். சமீப காலமாக youtube சேனல்களில் அவர் இறந்துவிட்டார், இவர் இறந்து விட்டார், அவருக்கு விவாகரத்து, இவருக்கு விவாகரத்து என்று பல பொய்யான தகவல்களை பரப்பும் சேனல்கள் இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது படம் வெளியாவதற்கு முன்பே பொதுமக்கள் விமர்சனம் கூறியது போல Thumbnail ரெடி செய்து பதிவிட்டு இருக்கின்றனர். இதை பார்த்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரே காண்டாகி போஸ்ட் போட்டிருப்பது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..!