மாவீரன் படம் குறித்து தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு கேனத்தனமான கதை என்று கடுமையாக விமர்சித்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா போன்ற பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் மாவீரன். வடசென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும கார்டூனிஸ்ட் சத்யா பத்திரிகையில் எப்படியாவது வேலைக்கு சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பத்திரிக்கையில் வேலை கிடைக்கிறது. பின்னர் குடிசை குடியிருப்பில் வசித்து வரும் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கிடைக்கிறது. அங்கு செல்லும் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக வீட்டின் சுவர்கள் பெயர்ந்து விழுவதும், ஜன்னல் கதவுகள் சேதம் அடைவதுமாக இருந்து வருகிறது. இதை அரசியல்வாதியிடம் தட்டிக் கேட்க முடியாத கோழையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

அப்போது அவருக்கு திடீரென ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை கொண்டு அவர் அந்த அரசியல்வாதியை எதிர்த்தார பின்னர் என்ன நடந்தது? என்பது குறித்த கதை தான் மாவீரனின் கதையாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் கலவையான விமர்சனங்களையே முன்வைத்து வரும் நிலையில் தற்போது சர்ச்சை நாயகனாக வலம் வரும் பயில்வான் ரங்கநாதனும் படத்தை கடுமையாக விமர்சித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Paper Weight Tamil