Categories: சினிமா

மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா?

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்திருக்கும் நிலையில் படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக் குழு. வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதை ஒரு குட்டி டீசருடன் படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். சின்னத்திரையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா என்கிற படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, எதிர்நீச்சல், ரஜினி முருகன், வேலைக்காரன், டாக்டர், டான்,பிரின்ஸ் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. எனவே தற்போது கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா? 1
இந்த நிலையில் தற்போது அவர் அயலான் மாவீரன் மற்றும் தனது 24 வது படத்திலும் நடித்து வருகிறார். மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும், அவர் தற்போது மடோனா அஸ்வினுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியீட்டுக்கு தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு குட்டி வீடியோவுடன் படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.


அதன்படி தற்போது வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று மாவீரன் திரைப்படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தெலுங்கில் இந்த படம் “மாவீருடு” என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியான வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Shanthi Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்