நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்திலிருந்து தற்பொழுது “வா வீரா” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்கிற படத்தின் மூலமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர் எதிர்நீச்சல், மனம் கொத்தி பறவை, மான் கராத்தே, ரஜினி முருகன், ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்் தற்போது அவர் மாவீரன் அயலான் மற்றும் பெயரிடப்படாத 21வது படத்தில் நடித்து வருகிறார். இதில் மாவீரன் திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. அயலான் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களின் பணிகளும் நிறைவு பெற்று, பிறகு தனது 21வது படத்தில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பத்திரிக்கையில் பணிபுரியும் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டீசர் ட்ரைலர் என்று அனைத்தும் வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கரை மற்றும் வண்ணாரப்பேட்டையிலே என்கிற இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது படத்தில் இருந்து மூன்றாவது பாடலாக “வா வீரா” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை பரத் சங்கர் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். யுகபாரதி இந்த பாடலுக்கு வரிகளை எழுதி இருக்கிறார்.
இந்த பாடலைப் பார்க்கும் போது அம்மா மகனுக்கு இடையில் இருக்கும் பாசத்தை கூறுவது போல் பாடல் அமைந்துள்ளது. தன்னுடைய மகனுக்காக சரிதா பாடுவது போன்ற பாடலை தற்போது இந்த படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil