“இருள் ஆளப் போகிறது” திரில்லிங்கான வீடியோவை வெளியிட்டது டிமான்டி காலணி படக்குழு.!

டிமாண்டி காலணி 2 படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலாக வெளியாகியிருக்கும் அந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. திருச்சியில் பிறந்து வளர்ந்த இவர் ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களில் ஏ ஆர் முருகதாஸுக்கு உதவி இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அருள் நிதியை வைத்து 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி என்கிற ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற பின்பு இரண்டாவது படமான இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கினார். தனது இரண்டாவது படமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இருள் ஆளப் போகிறது" திரில்லிங்கான வீடியோவை வெளியிட்டது டிமான்டி காலணி படக்குழு.! 1

விளம்பரம்

பின்னர் இவர் 2022 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் அருள்நிதியை வைத்து டிமான்டி 2 காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானிசங்கர் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் படக் குழு தற்போது மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. மிரட்டலாக இருக்கும் அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த படமும் பாகம் ஒன்று போல மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்க போகும் கன்னக்குழி அழகி ஷாலினி பாண்டே!!

"இருள் ஆளப் போகிறது" திரில்லிங்கான வீடியோவை வெளியிட்டது டிமான்டி காலணி படக்குழு.! 3

விளம்பரம்

டி பிளாக், தேஜாவு, டைரி, திருவின் குரல் என்று தொடர்ந்து திரில்லர் படங்களில் நடித்துவரும் அருள் நிதி கடைசியாக நடித்திருந்த படம் கழுவேத்ரி மூர்க்கன். இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த நிலையில் அடுத்த படமாக டிமான்டி காலனி 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் மேக்கிங் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment