இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு யூடியூபர் தான் மதன் கௌரி. இவரின் சேனலுக்கு தற்போது நித்தியானந்தா காப்பி ரைட் அடித்துள்ளார். இதனால் அவரது யூடியூப் சேனல் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக மதன் கௌரி தெரிவித்து இருக்கிறார். ஏதாவது கன்டென்ட் செய்து அதை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு, அதில் வருமானம் பார்த்து வரும் நபர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பலரும் காமெடி, படிப்பு, தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், சமையல் என தங்களது திறமைகளை யூடியூபில் காசாக்கி வருகின்றனர். அப்படி ஒருவர் தான் மதன் கௌரி. இவர் ஆரம்பத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை உதறிவிட்டு, முழு நேரமாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நாட்டில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி, புள்ளி விவரங்களுடன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதால் இவரின் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தது. அவரும் பல தகவல்களை சேகரித்து தனது சப்ஸ்கிரைபர்களுக்காக வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நித்தியானந்தா தனது சேனலுக்கு காபி ரைட் ஸ்டிரைக் அடித்திருப்பதாகவும், அதனால் தன்னுடைய சேனல் தற்போது அபாயத்தில் இருப்பதாகவும் கூறினார். இன்று திடீரென பார்த்தபோது தனக்கு ஒரு மெயில் வந்திருந்ததாகவும், அதை திறந்து பார்த்தால் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து ஒருவர் தனக்கு மெயில் அனுப்பி இருந்ததாகவும் கூறியிருந்தார்.
மும்பை சென்றபோது தான் நித்தியானந்தாவின் ஒரு விளம்பர போஸ்டர் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதை வீடியோவாக எடுத்து எனது வீடியோவில் ஒரு இடத்தில் பயன்படுத்தி இருந்தேன். அதுவும் தலைவன் எல்லா இடத்திலும் இருக்கிறார் பான் இந்தியா தலைவன் என்று பதிவிட்டிருந்தேன். அதில் எந்த தவறான தகவலையும் நான் போடவில்லை. மேலும் அவர்களின் வீடியோவை காப்பி அடித்து நான் என்னை வீடியோவில் பயன்படுத்தவில்லை. சுவரில் ஒட்டி இருந்த போஸ்டரைத் தான் நான் போட்டிருந்தேன். ஆனால் நான் அவர்களின் கண்டன்ட்டை காப்பி அடித்து விட்டதாக அவர்கள் என் youtube சேனலை முடக்க பார்க்கிறார்கள். இதனால் நான் யூடியூப்பிடம் அப்பீல் செய்துள்ளேன். மேலும் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடுக்கவும் இருப்பதாக மதன் கௌரி பேசியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Madan Gowri