Categories: உலகம்

மாயமான சிலி ராணுவ விமானம்! 38 ராணுவ வீரர்களின் நிலை என்ன?

வெளியிட்டது
மாயமான சிலி ராணுவ விமானம்! 38 ராணுவ வீரர்களின் நிலை என்ன? 1

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் சிலியின் நாட்டில் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற ராணுவ விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்திருக்கிறது.

ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச்சேர்ந்த அந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் புறப்பட்டுச்சென்றுள்ளதாகவும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 38 பேர் பயணித்திருந்தனர். மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்