மஹாலக்ஷ்மியின் மகனை பார்த்து இருக்கீங்களா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய சச்சின்.!

வெளியிட்டது

நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமாக இருக்கும் மகாலட்சுமியின் மகனின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. மகாலட்சுமி போலவே இருக்கும் சச்சினின் குழந்தை பருவ புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில், சமீபத்திய புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் மகாலட்சுமி. அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருந்த நிலையில் தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்திரன் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் வைத்து இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

மஹாலக்ஷ்மியின் மகனை பார்த்து இருக்கீங்களா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய சச்சின்.! 1
அதே சமயம் இவர்களது திருமணம் பலராலும் விமர்சிக்கப்பட்டது. ரவீந்திரன் தயாரிப்பாளர் என்பதாலும், பணம் அதிகமாக இருப்பதாலும் மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டதாக நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களை இன்டர்நெட்டில் பதிவிட்டு வந்தனர். ஆனால் தான் பணத்திற்காக காதலிக்கவில்லை, அவருடைய உண்மையான மனதை புரிந்து கொண்டு அவருடன் காதலில் விழுந்தேன் என்று விளக்கம் அளித்திருந்தார் மகாலட்சுமி. அதன் பின்னர் சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்து வருகின்றனர். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது, குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது, டூர் செல்வது என்று புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் மகாலட்சுமி.

இந்த நிலையில் அவரது பையன் சச்சினுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. சச்சினின் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்த மகாலட்சுமி, “தாயின் குட்டி இளவரசனே, உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! இந்த பிறந்தநாள் உனக்கு சிறந்ததாக அமைந்ததாக நம்புகிறேன் வரும் ஆண்டுகள் உனக்கு சிறப்பானதாக அமையட்டும். என்னுடைய குட்டி பூசணிக்காய், உன்னை பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன், லவ் யூ சச்சின் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் சச்சினின் பிறந்தநாளுக்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சச்சின் பார்ப்பதற்கு அப்படியே மகாலட்சுமியைப் போலவே இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்