தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் காலமாகி இருக்கும் செய்தி தற்போது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அவர் கொச்சி மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கும் செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவை சேர்ந்தவர் இயக்குனர் சித்திக் மலையாளத்தில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். 1986 ஆம் ஆண்டு வெளியான பாப்பன் பிரியப்பட்ட பாப்பன் என்கிற படத்தின் மூலமாக வசனகர்த்தாவாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில படங்களுக்கு கதை எழுதினார். பின்னர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற படத்தின் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் 1999 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் என்கிற படத்தை இயக்கினார். பின்னர் அதை தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயாணி, ராதாரவி உள்ளிட்டோரை வைத்து ரீமேக் செய்து தமிழ் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். தான் ஒரு நகைச்சுவை மிகுந்த இயக்குனர் என்பதை முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கு காட்டியிருந்தார். பிரண்ட்ஸ் படத்திற்கு பின்னர் பெரிய அளவில் எந்த படமும் இயக்காத அவர், மீண்டும் 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா படத்தை இயக்கினார். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான சாதுமிரண்டா என்கிற படத்தையும், 2011 இல் காவலன் என்கிற படத்தையும், 2018 ஆம் ஆண்டு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தையும் இயக்கியிருந்தார். 2020ஆம் ஆண்டு பிக் பிரதர் என்கிற படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.

அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நிம்மோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென இருதய முடக்கம் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தில் இருந்து வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவு மலையாள திரையுலகம் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பலரும் தங்களது இரங்கலை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த மாதம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி அவருக்கு 63 வயது நிறைவடைந்து இருந்த நிலையில் தற்போது அவர் காலமாக இருக்கும் செய்தி அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: