விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜே ஜாக்குலின் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரது புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே விஜே என்றாலே நல்ல வசீகரத் தோற்றத்துடன், நல்ல குரல் வளம் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் தன்னுடைய தோற்றத்தை பற்றி கவலைப்படாமல், சற்று கீரலான குரலுடன் வீடியோ ஜாக்கியாக வலம் வருபவர் தான் ஜாக்குலின். இவர் முழு பெயர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். பலரும் ஜாக்குலினை கலாய்த்து பேசுவது காமெடியாக இருக்கும். குறிப்பாக தீனா இவரது குரலை “ஆண் குரல்” என்று கலாய்ப்பது மிக காமெடியாக இருக்கும்.

ஆரம்பத்தில் இவர் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2014 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 5-க்காக ஆங்கரிங் நடத்தப்பட்டது அப்போது ஜாக்லினும் கலந்து கொண்டார் இவருக்கும் ரக்ஷனுக்கும் ஆங்கரிங் செய்யும் வேலை கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை பல நிகழ்ச்சிகளை இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் ஒரு காரணமாக இருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜாக்குலின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி ஏ என்ற நாடகத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தார். மேலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தும் அசத்தி இருப்பார்.

அதற்குப் பிறகு ஆக்டிவாக இல்லாமல் இருந்து வருகிறார் ஜாக்குலின். அவ்வப்போது instagramல் தான் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் வரும் ஒன்பதாம் தேதி பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ள நிலையில் அவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஏழு நாட்களை இருக்கும் நிலையில் அவரின் இன்ஸ்டாகிராமில் மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று அவர் பதிவிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ஜாக்குலினுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
