பேசிக் கொண்டிருந்த போது திடீரென கத்திய மாணவர்கள்.! ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி

மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாணவர்கள் கத்தியதால் விஜய் சேதுபதி கடுப்பாகி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திரைத்துறையில் துணை வேடங்களில் நடித்து இன்று மிகப் பெரிய இடத்தை அடைந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தனது கடுமையான உழைப்பால் இந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. குறுகிய காலத்திலேயே முண்ணனி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்து மிரட்டி இருப்பார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் கல்லூரி ஒன்றுக்கு சென்ற அவர் மாணவர்கள் செய்த செயலால் மிக கடுப்பாகி இருக்கிறார்.

பேசிக் கொண்டிருந்த போது திடீரென கத்திய மாணவர்கள்.! ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி 1

விளம்பரம்

சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற அவர் மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை கூறிக் கொண்டு இருந்தார். செல்வத்துள் செல்வம் என்ற குறளை மேற்கோள் காட்டி அவர் பேசிக் கொண்டு இருந்தார். அதில் தலை என்ற வார்த்தையை கேட்டதும், மாணவர்கள் கத்த தொடங்கினர். தல அஜீத்தை தான் சொல்கிறார் என்று நினைத்து கூச்சல் போட்டனர். இதனால் செம்ம கடுப்பான விஜய் சேதுபதி, தேவையில்லாம கத்தாதீங்க, நான் என்ன பேசிக் கொண்டு இருக்கிறேன், என்னனு தெரியாம, போங்கப்பா என சொல்லிட்டு பேச்சை தொடர்ந்தார். தலை தான் உடம்புக்கு முக்கியம், அதனால் தான் திருவள்ளுவர் அப்படி சொல்லியிருக்கிறார் என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

தொடர்புடையவை  "ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்...மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்"!!

பேசிக் கொண்டிருந்த போது திடீரென கத்திய மாணவர்கள்.! ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி 3

விளம்பரம்

அந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment