தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்.! இரண்டு காமெடி நடிகர்களுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தம்

சினிமா துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் திரைத்துறைக்கு வருபவர்கள் உண்டு. அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பலரும் வெள்ளித்திரையில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். அப்படி எளிய பின்னணியில் இருந்து வந்து இன்றைக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தாமரைச்செல்வி. கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் நாடகம் போட்டு தன் வாழ்க்கையை நடத்தி வந்தவர் தாமரைச்செல்வி. இவருக்கு பிக்பாஸ் சீசன் 5 வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எண்ணியிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தாமரைச்செல்வி வெளியே அனுப்பப்பட்டார். இது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்.! இரண்டு காமெடி நடிகர்களுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் 1

விளம்பரம்

பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி தளத்தில் வெளியான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இங்கும் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவரால் இங்கும் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் தனது கணவர் பார்த்தசாரதியுடன் கலந்து கொண்டார். இதிலும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. என்ற போதிலும் தாமரை செல்விக்கான ஆதரவு குறையாமலேயே இருந்து வருகிறது. தாமரைச்செல்வி எதற்கும் கலங்காமல் ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சேனலை பின்தொடர்பார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வந்து கொண்டே வருகிறது. சமையல் வீடியோ, ஹோம் டூர், ப்ரிட்ஜ் டூர், Vlog என கலக்கி வருகிறார் தாமரைச்செல்வி.

தொடர்புடையவை  HIP HOP Aadhi இசைநிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்..! அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்..!

தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்.! இரண்டு காமெடி நடிகர்களுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் 3

விளம்பரம்

இந்த நிலையில் தாமரை செல்விக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மூவி சூட்டிங் டைம் என்று பதிவிட்டு இருக்கிறார். தாமரைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்.! இரண்டு காமெடி நடிகர்களுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment