தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஹிப் ஹாப் ஆதி. பின்னர் நடிகராவும் இயக்குனராகவும் ஒரே படத்தில் அறிமுகமாகி கலக்கி இருந்தார். இவரின் மீசையை முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து வரிசையாக படங்கள் நடித்து கலக்கி வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் கடைசி உலக போர்.

இப்படம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி நேற்று கோவையில் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு ஆதியின் பாடல்களை ரசித்து கேட்டு நடனமாடி அசத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருதரப்பு இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இளைஞர்கள் மாறி மாறி தாக்கி கொண்டதால், அங்கு இருந்த போலீஸ் மற்றும் பவுன்சர்கள் உடனடியாக உள்ளே இறங்கி சண்டையிட்ட இளைஞர்களை இழுத்து வந்து வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.