சன் மியூசிக்கில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் விஜே மகாலட்சுமி. பின்னர் 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்னும் சீரியலின் மூலமாக சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் இவர் பல நாடகங்களில் பணியாற்றி இருக்கிறார். வாணி ராணி, அன்பே வா போன்ற சீரியல்களில் நடித்தார். ஜீ தமிழில் தேவதையை கண்டேன் என்ற சீரியலிலும், கலர்ஸ் தமிழில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலிலும் நடித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் திருமணம் முடிந்தது. மஹாலெட்சுமிக்கு ஏற்கனவே அணில் என்பவருடன் திருமணம் ஆகியிருந்தது. அவர்களுக்கு ஆறு வயதில் சச்சின் என்ற மகனும் இருக்கிறார். அணில் மஹாலெட்சுமி இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விவாகரத்துக்கு பின்னர் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரரின் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடன் காதலில் விழுந்துள்ளார். ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் சமீபத்தில் திருப்பதி கோவிலில் வைத்து எளிய முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இருவரும் திருமணத்தை பலரும் வாழ்த்தி வந்த நிலையில், பல எதிர்ப்புகளும் இருந்தன. உருவ கேலிகள், கிண்டல்கள் என தொடர்ந்து இந்த ஜோடிகள் பல விமர்சனங்களை சந்தித்து வந்தன. திருமணம் முடிந்த பிறகு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வரும் இந்த ஜோடிகள், தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் மகாலட்சுமி தனது மகன் சச்சின் குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதில் மகாலட்சுமியிடம் உங்களது மகன் உங்கள் திருமணத்தை எப்படி பார்க்கிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த மகாலட்சுமி என் மகனுக்கு ஆறு வயது தான். ஆனால் அவன் மிகவும் பக்குவமாக நடந்து கொண்டான். எங்கள் திருமணத்தில் எனக்கு நகைகளை தேர்ந்தெடுப்பது, புடவைகளை தேர்ந்தெடுப்பது என்று அனைத்தையும் முன்னின்று செய்தான் என்று மஹாலெட்சுமி பேசினார். மேலும் தன் திருமணத்திற்கு இத்தனை நாட்களே இருக்கிறது என்று சொல்லி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் என்றும் மஹாலெட்சுமி பேசினார்.