“நீ என்னோட மனைவியே கிடையாது” காவேரியை சுக்கு நூறாக உடைத்த விஜயின் வார்த்தைகள்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது விஜய் காவேரியிடம் நீ எனக்கு உண்மையான மனைவியே கிடையாது என்று சொல்லி அதிர வைக்கிறார். இதனால் காவேரி மனம் உடைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயும் காவேரியும் இணைந்து தங்களுக்கு தெரிந்த கம்பெனி ஒன்றில் 25வது ஆண்டு விழாவிற்கு விருந்தினர்களாக செல்கின்றனர். அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு கொடுப்பதற்காக துணிமணிகளை காவிரியின் அக்காவான கங்கா மற்றும் அவரது மாமா குமரனிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார் அந்ந நிறுவனத்தின் உரிமையாளர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நீ என்னோட மனைவியே கிடையாது" காவேரியை சுக்கு நூறாக உடைத்த விஜயின் வார்த்தைகள்.! 1

ஆனால் துணி வருவதற்கு தாமதமானதால் விஜய்யும் காவேரியும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த சமயம் பார்த்து கங்காவும் குமரனும் தாங்கள் தைத்துக் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வளவு நேரம் தாமதமாக வந்ததால் விருந்தினர்கள் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள். உங்கள் துணியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று ஆர்டர் கொடுத்தவர் திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால் அந்த சமயம் காவேரி தனது சகோதரியையும் மாமாவையும் காப்பாற்றுவதற்காக செல்கிறார். ஆனால் விஜய் காவேரியை தடுத்து நிறுத்தி விடுகிறார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வரும் விஜய் காவேரி அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆனது என்று கேட்க என் மனைவியின் அக்கா தான் ஆர்டர் செய்து கொண்டு வந்தார் என்று நீங்கள் அந்த உரிமையாளரிடம் சொல்லி இருக்கலாமே என காவேரி கேட்கிறார். அப்போது கோபப்படும் விஜய் நீ என்னுடைய ஒரிஜினல் மனைவியை கிடையாது என்று சொல்லி காவிரியை நோகடிக்கிறார். விஜயின் இந்த பேச்சை கேட்ட காவேரி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்