விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது அர்ஜூன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். அதற்கு கோதை முக்கிய காரணமாக இருக்கிறார். ராகிணிக்காக, கோதை தங்கள் தரப்பு வக்கீலை சந்தித்து அர்ஜுனுக்கு எதிராக வாதிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். அதேபோல் வழக்கறிஞரும் வாதிடாமல் விட்டுவிட அர்ஜுனுக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. தற்போது அவர் ஜாமினில் வெளியே வருகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் தொடரில் ஹீரோவுக்கு வில்லனாக அர்ஜுன் என்கிற கதாபாத்திரம் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோவான தமிழின் தங்கையை திருமணம் செய்து கொள்ளும் அர்ஜூன் கதாபாத்திரம் ஹீரோவின் குடும்பத்தை சின்னாபின்னம் ஆக்குகிறது. இதற்கு ஹீரோவின் தங்கை ராகிணியும் உடந்தையாக இருக்கிறார். இந்த நிலையில் தொழில் போட்டியில் அர்ஜுனை தமிழ் சிறைக்கு அனுப்புகிறார். ஆனால் அவர் சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார். அதற்கு முக்கிய காரணமாக கோதை இருக்கிறார். கோதை தனது மகள் ராகிணிக்காக தங்கள் தரப்பு வக்கீலிடம் சென்று அர்ஜுனுக்கு எதிராக வாதிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள அவரும் அதேபோல் வாதிடாமல் அமைதியாகிறார். எனவே அர்ஜுனனுக்கு எளிமையாக ஜாமீன் கிடைத்து விடுகிறது. இதை கோதையின் இரண்டாவது மகனாக இருக்கும் கார்த்தி கண்டுபிடித்து விடுகிறார்.

கார்த்தி வீட்டிற்கு வந்து அர்ஜுன் ஜாமீனுக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் இருக்கிறது என்று கோதையை கடுமையாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிடும் தமிழ் நியாயத்திற்காக பெற்ற மகனையே வெளியே அனுப்பியவர். அவரை போய் சந்தேகப்படுகிறாயே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழின் இந்த பேச்சால் பதில் சொல்ல முடியாமல் கோதை கூனுக் குறுகி நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television