விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தனது அக்கா கங்காவிற்காக காவேரி சில அதிரடி முடிவுகளை எடுக்கிறார் அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. “நான்கு சகோதரிகளின் கதை” என்கிற அடையாளத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சீரியல் தான் ‘மகாநதி’. இதில் கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்று நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள். விதிவசத்தால் இவர்கள் ஊரை விட்டு காலி செய்து இன்னொரு ஊருக்கு செல்கிறார்கள். அங்கு காவேரி விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் காவேரி விஜயை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இதில் கங்காவிற்கு சிறிதும் உடன்பாடில்லை் எனவே காவிரியை பார்த்தாலே கங்காவிற்கு கோபம் வருகிறது. சகோதரிகள் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கங்காவிற்கு தாலி பிரித்து கோர்ப்பதற்கான நிகழ்வை வீட்டினர் ஏற்பாடு செய்கின்றனர். அதே நாளில் காவேரிக்கும் தாலி பிரித்து கோர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் தனது சகோதரி கங்காவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடக்க வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார் காவேரி.
அவர் மழையில் நனைந்து உடல்நிலை சரியில்லாமல் போனால் தனக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடக்காமல் நின்று விட்டு தனது சகோதரிக்கு நடக்கும் என்று சொல்லி தனக்குத்தானே காய்ச்சல் வரவழைத்துக் கொண்டு படுத்து கிடக்கிறார். இந்த ப்ரோமோவைப் பார்த்த பலரும் இனியாவது காவேரியை கங்கா புரிந்து கொண்டு மீண்டும் சகோதரிகள் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television