பொம்மைக்கு புடவை கட்டிவிடும் டாஸ்க்.! திணறும் விஜய் மற்றும் சூர்யா.! உதவி செய்யும் மஹா – காவேரி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய இரண்டு தொடர்களின் மகா சங்கமம் தற்போது நடந்துவரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. அதில் ஜோடியாக பங்கு பெறும் போட்டிகளில் தற்போது மகா, சூர்யா, காவேரி, விஜய், கங்கா, குமரன் என அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொம்மைக்கு புடவை கட்டிவிடும் டாஸ்க்.! திணறும் விஜய் மற்றும் சூர்யா.! உதவி செய்யும் மஹா - காவேரி.! 1
‘மகா சங்கமம்’ என்கிற பெயரில் இரண்டு தொடர்களை இணைத்து ஒளிபரப்புவதை விஜய் தொலைக்காட்சி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ‘பாக்கியலட்சுமி’ ஆகிய தொடர்கள் மகா சங்கமத்தை ஒளிபரப்பி வரும் நிலையில், தற்போது ‘மகாநதி’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ தொடர்களும் மகா்சங்கமத்தை ஒளிபரப்பி வருகிறது. தற்போது கதைப்படி இரண்டு தொடர்களின் கதாபாத்திரங்களும் டூருக்காக ஒரு இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு ஒரு போட்டி வைக்கப்படுகிறது. ஜோடியாக இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் ஐந்து லட்ச ரூபாய் பணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


இந்த பணம் தங்களுக்கு கிடைத்தால் தங்களின் குடும்ப வறுமையை போக்கிவிடலாம் என்று சொல்லி மகாவும் காவிரியும் திட்டம் போடுகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இதற்கான முதல் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்