காவேரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் பசுபதி.! ராகினி கழுத்தில் தாலி கட்டப்போகும் நிவின்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கொடைக்கானலுக்குச் சென்ற காவேரியை பசுபதி கடத்தி, அவரை கொலை செய்வது விடுவதாக மிரட்டி நிவினுக்கும் தனது மகள் ராகிணிக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிவின் ராகிணி கழுத்தில் தாலி கட்டுவானா? விஜய் காவேரியை காப்பாற்றுவானா? என்கிற எதிர்பார்ப்புடன் தற்போது இந்த ப்ரோமோ முடிவடைந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் பசுபதி.! ராகினி கழுத்தில் தாலி கட்டப்போகும் நிவின்.! 1
‘மகாநதி’ சீரியலில் நிவினும், காவேரியும் ஆரம்பத்தில் காதலித்து வருகின்றனர். ஆனால் நிவினுக்கு வேறு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து கொள்ளும் காவேரி, தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் இருந்து வெளியேறி வேறு ஊரில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு விஜயுடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் திருமணம் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்த திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த காவேரி, பின்னர் விஜயுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில் விஜய் மற்றும் காவேரி இருவரும் இணைந்து மீண்டும் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "மரணபீதியில் கோமாளிகள்....இன்னும் நான் ஆரம்பிக்கவேலயே....அலறவிட்ட புது செஃப்"

காவேரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் பசுபதி.! ராகினி கழுத்தில் தாலி கட்டப்போகும் நிவின்.! 3
அந்த சமயம் காவேரியை பசுபதி கடத்திச் சென்று விடுகிறார். மேலும் தனது மகள் ராகிணியை, காவேரி காதலித்து வந்த நிவினுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். காவேரியின் கழுத்தில் கத்தியை வைத்து வீடியோ காலில் நிவினை மிரட்டி ராகிணியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment