விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது நிவின் காவிரியை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். இதனால் நிவின் காவிரியுடன் திருமணம் செய்து கொள்வாரோ என்கிற எண்ணம் பலருக்கும் எழுந்திருக்கிறது. அதை தற்போது ராகினி நேரில் பார்த்து விடுகிறார். விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி என்னும் சீரியல். இந்த சீரியலில் தந்தையை இழந்த நான்கு அக்கா தங்கைகள் எவ்வாறு குடும்ப வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பது குறித்த கதையாக இது இருந்து வருகிறது. “நான்கு சகோதரிகளின் கதை” என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. குறிப்பாக குமரன் – கங்கா ஜோடிகளும், நிவின் – காவேரி ஜோடிகளும் கதையை விறுவிறுப்பாக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதிகண்ணம்மா சீரியலுக்குப் பிறகு பிரவீன் பென்னட் இயக்கி வரும் நாடகம் தான் மகாநதி. இந்த நாடகத்தை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நாடகத்தில் கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்று நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இதில் மூத்தவர் கங்காவை அவரது அத்தை மகன் குமரன் திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் குமரனை ஏற்றுக்கொள்ளாத கங்கா தற்போது அவருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு தங்கையாக இருக்கும் காவேரியும் நிவினும் காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் காதலித்து வருகின்றனர். இதற்கிடையே நிவினுக்கு அத்தை மகள் ராகினியுடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு எடுக்கின்றனர். ஆனால் நிவினுக்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லை.
இந்த நிலையில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ராகினியை பெண் பார்ப்பதற்காக நிவினுடன் அவரது பெற்றோர்கள் செல்கின்றனர். ஆனால் நிவினுக்கு அதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. பின்னர் காவேரியை சென்று நிவின் சந்திக்கிறார். காவிரியும் நிவினும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பதை ராகினி தற்போது பார்த்து விடுகிறார். இதனால் அடுத்தடுத்த கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவின் காவேரியை பிரித்து விட வேண்டாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television