சிறகடிக்க சீரியல் ஹீரோ மாற்றப்படுகிறாரா.? இனி இவருக்கு பதில் இவரா.? தீயாய் பரவும் தகவல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க சீரியலில் கதாநாயகன் மாற்றப்படுவதாக தற்போது தகவல் வெளியான நிலையில் அது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் தற்போது பல விறுவிறுப்பான கதை களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் சீரியலின் கதாநாயகன் முத்து, தண்ணி அடித்துக் கொண்டு திரியும் ஊதாரி நபராக இருக்கிறார். அப்போது அவருக்கு குடும்ப பாங்காக இருக்கும் மீனாவுடன் திருமணம் நடைபெறுகிறது. மீனாவுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கின்றனர்.

சிறகடிக்க சீரியல் ஹீரோ மாற்றப்படுகிறாரா.? இனி இவருக்கு பதில் இவரா.? தீயாய் பரவும் தகவல்.! 1
முத்துவின் தாயார் விஜயாவுக்கும் முத்து மற்றும் மீனாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் தனது மூத்த மகன் மனோஜ் மீதுதான் பாசம் காட்டுகிறார். அவருக்கு தனது இளைய மகன் முத்துவையும் அவரது மனைவியும் மீனவையும் சுத்தமாக பிடிப்பதில்லை. இந்த நிலையில் தற்போது மூத்த மகன் மனோஜ்க்கும் ரோகினிக்கும் திருமண ஏற்பாடுகளை விஜயா நடத்தி வருகிறார். அந்த திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு தற்போது இந்த சீரியலின் பரபரப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சீரியல் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கக், இதில் ஹீரோவாக நடித்து வரும் வெற்றி வசந்த் சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்கிற தகவல் இன்று காலை முதல் இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியது. அவருக்கு பதிலாக சமீபத்தில் விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷ்ணுகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

விளம்பரம்
தொடர்புடையவை  முற்றிய சண்டை.! அடித்து கொள்ளும் அசீம், விக்ரமன்.! கோபத்தில் கத்திய ஜிபி முத்து.!

சிறகடிக்க சீரியல் ஹீரோ மாற்றப்படுகிறாரா.? இனி இவருக்கு பதில் இவரா.? தீயாய் பரவும் தகவல்.! 3

 

விளம்பரம்

இதனால் சிறகடிக்க சீரியலின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி விஷ்ணுகாந்த் வெற்றி வசத்துக்கு பதிலாக நடிக்கப் போவதில்லை. அவர் சிறகடிக்க ஆசை நாடகத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அந்த நாடகத்தில் தான் விஷ்ணுகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சிறகடிக்க சீரியல் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment