விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இருந்து கதாநாயகி பிரதீபா விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கமிட் ஆகியிருக்கிறார். இன்றைய எபிசோடில் இருந்து அந்த மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியின் முக்கிய சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ‘மகாநதி’ சீரியல். இதில் கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்று தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் கதையாக இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதைப்படி இரண்டாவது தங்கையாக இருக்கும் காவேரி விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். நிவினை காதலித்து வந்து நிலையில் அவருக்கு விஜயுடன் திருமணம் முடிகிறது.

தற்போது காவேரி விஜய் திருமண வரவேற்பிற்கு வரும் பசுபதி விஜயிடம் காவேரி பற்றி தவறாக கூறிக் கொண்டிருக்கிறார் நிவினம் காவேரியும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை அவரிடம் குறும்படமாக போட்டு காட்டுகிறார். ஆனால் காவேரியின் கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காவேரி தற்போது என்னுடைய மனைவி, அவளைப் பற்றி யார் தவறாக பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லி பசுபதியின் கன்னத்தில் அறைந்து அவரை வெளியே அனுப்பி விடுகிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதாநாயகியாக நடித்து வந்த பிரதீபாவை மாற்றி இருக்கின்றனர்.
கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு படங்களின் நடிப்பும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் சீரியலில் இருந்து வந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் இனி கங்காவாக நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்றைய எபிசோடில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.