Categories: சினிமா

‘அசுரன்’ படத்தை புகழந்து தள்ளிய மகேஷ் பாபு!!

வெளியிட்டது
'அசுரன்' படத்தை புகழந்து தள்ளிய மகேஷ் பாபு!! 1

‘அசுரன்’படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் மகேஷ் பாபு.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களுள் முதல் 100 கோடி ரூபாய் வியாபாரத்தைக் கடந்த படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியலில் ‘அசுரன்’ படமும் இடம்பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. வெற்றிமாறன் இயக்கம், தனுஷ் நடிப்பு உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் மகேஷ் பாபுவும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் “‘அசுரன்’ அசலான, ஆழமான, உண்மையான ஒரு படம்… மிகச்சிறந்த சினிமா.. வாழ்த்துகள் தனுஷ், வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ஜி.வி.பிரகாஷ், வேல்ராஜ் மற்றும் ஒட்டுமொத்த ‘அசுரன்’ குழுவுக்கும்” என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.’அசுரன்’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்