Categories: உலகம்

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்!!

வெளியிட்டது
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்!! 1

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டார்கள்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வின் பிரசன்னமாகியிருந்தனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை நடத்திசெல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை நேற்று முன்தினம் தினம் இராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்