மகாபாவின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? எவ்வளோ நீட்டா வச்சி இருக்காரு..பெஸ்ட் ஹோம் டூர் வீடியோ

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் என்றாலே மக்களுக்கு ஒரு தனி சந்தோஷம் தான். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியை வழங்குவதில் விஜய் டிவியில் முன்னிலை வகிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிக்கு முக்கிய தூணாக இருப்பவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். அதிலும் குறிப்பாக மாகாபா ஆனந்த், பிரியங்கா போன்றவர்கள் பல வருடங்களாக இந்த தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இல்லாத ரியாலிட்டி ஷோக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதில் குறிப்பாக மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கரை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணமாக இருப்பவர் இவரே. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகாபாவின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? எவ்வளோ நீட்டா வச்சி இருக்காரு..பெஸ்ட் ஹோம் டூர் வீடியோ 1

சென்னையில் பிறந்து வளர்ந்த மாகாபா ஆனந்த் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் வேலை தேடி பல இடங்களில் அலைந்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வந்த அவர், சினிமா ஆசையில் ஒரு ரேடியோ ஜாக்கியாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். திருமணத்திற்கு முன்பு ஒரு தனி அறையில் நண்பருடன் தங்கி தான் பட்ட கஷ்டங்களை பலமுறை அவர் பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, ராமர் வீடு என பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை சரியாக கை கொடுக்காத காரணத்தினால், மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி ஆங்கரிங் தொழிலை செய்து வருகிறார்.

சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாகாபா ஆனந்த், தற்போது தனது வீட்டின் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பிரபலங்கள் தங்கள் வீட்டை சுற்றி காண்பித்து டூர் வீடியோ வெளியிடுவது தற்போது அதிகமாகி வருகிறது. மக்களும் அந்த வீடியோக்களை விரும்பிப் பார்க்கின்றனர். தாம் விரும்பும் ஒருவரின் வீடு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு பிரபலங்களும் தங்கள் வீட்டை சுற்றி காண்பிப்பது, பிரிட்ஜை சுற்றி காண்பிப்பது என்று ஹோம் டூர் பிரிட்ஜ் டூர் என்று தனித்தனியாக போட்டு வருகின்றனர். அந்த வகையில் மாகாபா ஆனந்தும் தனது வீட்டை சுற்றி கட்டி ஒரு ஹோம் டூர் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். சில நாட்களிலேயே அது பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது நீங்களும் அந்த வீடியோவை காண..watch the below video..

Youtube video code embed credits: Mr Makapa

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்