“காட்சிகளை செதுக்கும் பார்த்திபன்…making of இரவின் நிழல் வீடியோ”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

"காட்சிகளை செதுக்கும் பார்த்திபன்...making of இரவின் நிழல் வீடியோ"!! 1

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. . இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

இந்த வீடியோவில் ஒரு காட்சியை சகநடிகர் ஒருவருக்கு நடித்து காண்பித்து அதனை எவ்வாறு மீண்டும் நடிக்க வேண்டும் என்பதை பக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுத்து நடிகரிடம் இருந்து தனக்கு தேவைப்படும் உழைப்பை வாங்குகிறார் பார்த்திபன். இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Movie Buff tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்