விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அருமபுரி என்கிற மலைவாழ் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு சுரங்கம் அமைப்பதற்காக அரசு முடிவெடுக்கிறது. அப்போது அங்கு பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) தலைமையில் ஒரு குழு மக்கள் படையாக திரள்கிறது. இவர்கள் அரசுக்கு எதிராக சுரங்கம் தோன்றும் திட்டத்தை கைவிடுவதற்காக பல வகையான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை ஒடுக்க சேத்தன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
கைதேர்ந்த காவல் அதிகாரிகளை கொண்டு இந்த சிறப்புப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் குழுவானது மக்கள் படையின் தலைவராக இருக்கும் விஜய் சேதுபதியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறது. 25 ஆண்டுகளாக போலீசுக்கும் மக்கள் படைக்கும் இடையே போராட்டம் நடந்து வருகிறது. மக்கள் படையிலும் பலர் உயிர்த் தியாகங்களை செய்து இருக்கின்றனர். காவல்துறையிலும் பல இறப்புகள் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் தான் சூரி இந்த போலீஸ் படையின் கார் டிரைவராக வேலைக்கு வந்து சேர்கிறார். ஆரம்பத்தில் செக்போஸ்டில் வேலை பார்த்து வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் சூரி. அப்போது வழியில் கதாநாயகி பவானி ஸ்ரீயை பார்க்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. இப்படியாக காதல் ட்ராக் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமிக்கிறது. அவர்தான் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த நிலையில் ஒரு நாள் காட்டுப்பகுதியில் விஜய் சேதுபதி தங்கி இருக்கும் இடத்தை சூரி பார்த்து விடுகிறார். அதை தனது உயர் அதிகாரியிடம் சொல்ல எவ்வளவோ முயற்சி செய்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  துணிவு படம் எப்போ வெளியாகுதுனு தெரியுமா? அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்

விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 3

பின்னர் சிறப்பு அதிகாரியாக இருக்கும் கௌதம் மேனனிடம் இந்த விஷயத்தைக் கூற அவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக மலைப்பகுதிகளுக்கு செல்கிறார் சூரி. பின்னர் அங்கு விஜய் சேதுபதியை பிடித்தனரா? உண்மையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஜெயகாந்தன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் தேர்ந்த இயக்குனராக வெற்றிமாறன் இந்த படத்தை மிக அருமையாக இயக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எதார்த்தமான இயக்கம், விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான வசனங்கள் என்று தனக்கு கிடைத்த கதைக்களத்தை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார் வெற்றிமாறன். எளிய மக்கள் மீது பாயும் சட்டங்கள், போலீஸ் அதிகாரிகள் மக்கள் மீது செய்யும் கொடுமைகள், குறிப்பாக பெண்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் ஆகிய காட்சிகளை நம்மை அறியாமல் தேகம் சிலிர்க்க வைக்கிறார் வெற்றிமாறன். அந்த அளவிற்கு நடிகர்கள் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

விளம்பரம்
தொடர்புடையவை  பிகில் படம் வெறித்தனம்! ஹாட்ரிக் வெற்றியில் அட்லி – விஜய் காம்போ!!

விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 5

இவ்வளவு நாள் காமெடியனாக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சூரி, தற்போது ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். “தப்பு செய்தால்தான் தானே மன்னிப்பு கேட்க வேண்டும்.? “போலீஸ் என்பது மக்களை பாதுகாக்க தானே?” என்றெல்லாம் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கி கிடைத்தவுடன் சூரியின் மாற்றம் கைத்தட்டல்களை பெற வைக்கிறது. மேலும் அவருக்கு இணையாக புதுமுகநாயகி பவானி ஸ்ரீ நடிப்பில் அசத்தியுள்ளார். காவல்துறை அதிகாரிகளால் அவருக்கு கொடுமை நடக்கும் பொழுது அவரது நடிப்பு பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. வழக்கம்போல விஜய் சேதுபதியின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. இரண்டாம் பாகத்தில் முழு ஆட்டக்காரராக விஜய் சேதுபதி இருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முதல் பாதி முடியும் தருவாயில் இரண்டாம் பாதியில் சில காட்சிகளை காட்டுகிறார்கள். அப்போதே விஜய் சேதுபதியின் ஆட்டம் அங்கே உறுதி செய்யப்படுகிறது. மேலும் சேத்தன், கௌதம் மேனன், ராஜிவ் மேனன் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான பங்களிப்பை சசெய்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  BIGGBOSS-ல் இருந்து வந்த ஸ்ருத்திகாவுக்கு பலத்த வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்..! கண் கலங்கி போன ஸ்ருத்திகா

விடுதலை படம் எப்படி இருக்கிறது.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 7
இளையராஜாவின் இசை பற்றி சொல்லவா வேண்டும்? வழக்கம்போல் தனது இசையால் பலரின் மனங்களை கட்டிப்போட்டு விட்டார். ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். மலைப்பகுதிகளிலும் லாக்கப் காட்சிகளிலும் எடுக்கப்பட்டுள்ள விதம் மிக அருமை. எடிட்டிங் ஆக்ஷன் காட்சிகள் என படத்தின் ஒவ்வொரு அங்கமும் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்த்தல் goosebumps தருணங்களை பெற முடியும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்து இல்லை.! மொத்தத்தில் வெற்றிமாறனின் விடுதலை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 4.0/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment