வினையாக மாறிய விளையாட்டு.! நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நாஞ்சில் விஜயன்..!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து தற்போது நாஞ்சில் விஜயன் கோபமாக வெளியேறி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியின் குறிப்பிட தகுந்த காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் பெண் வேடங்களில் காமெடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் உட்கார முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் நாஞ்சில் விஜயன். அப்போது சக நடிகராக இருக்கும் வினோத் சேரை பின்னால் பிடித்து இழுத்து இழுத்து விடுகிறார். இதனால் கடுப்பான அவர் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொல்லி கோபமாக எழுந்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பல சின்னத்திரை கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வினையாக மாறிய விளையாட்டு.! நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நாஞ்சில் விஜயன்..! 1

விளம்பரம்

குக் வித் கோமாளி பிரபலமாக இருக்கும் புகழ், பாலா, நாஞ்சில் விஜயன், ராமர், பழைய ஜோக் தங்கதுரை போன்ற பலர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பிரபலமாகி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவரும் பல படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்கிற நிகழ்ச்சி நடந்து வருகிறது. கலக்கப்போவது யாரு சீசன்களில் பிரபலமாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி செய்து வருகின்றனர். மூன்று சீசன்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனின் நடுவர்களாக தாடி பாலாஜி, மதுரை முத்து, பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ரேஷ்மா, மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடையவை  ஆதி குணசேகரனை பங்கம் செய்து விட்ட நந்தினி.! பதில் பேச முடியாமல் முழிக்கும் ஆதி குணசேகரன்.!

வினையாக மாறிய விளையாட்டு.! நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நாஞ்சில் விஜயன்..! 3
இந்த நிலையில் இந்த வாரம் 1947 படத்தின் ப்ரமோஷனுக்காக கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இந்த வாரம் நாஞ்சில் விஜயன் மற்றும் குழுவினர் ஒரு காமெடி ஸ்கிரிப்ட் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது வினோத், நாஞ்சில் விஜயன் உட்காரும்போது எல்லாம் சேரை நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறார். இது ஸ்கிரிப்டில் இருந்த போதிலும் நாஞ்சில் விஜயன் கோபம் கொள்கிறார். அடிக்கடி சேரை நகர்த்தினால் எனக்கு கோபம் வரும் என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து நான் வரவில்லை என்று சொல்லி வெளியேறுகிறார். மேலும் இயக்குனரிடம் சென்று சண்டையும் போடுகிறார். இது பிராங்காக இருக்க கூடும் என்று பலரும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment