‘மலர்’ சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய ஹீரோ அக்னி.! அவரே கொடுத்த விளக்கம்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலில் இருந்து ஹீரோ அக்னி விலகி இருப்பது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விலகல் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அக்னி, ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில், அவர் விலகிய பின்பு அவருக்கு பதிலாக நடிக்கத் தொடங்கினர் அக்னி. தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மலர்’ சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்தத் தொடர் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

'மலர்' சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய ஹீரோ அக்னி.! அவரே கொடுத்த விளக்கம்.! 1
மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் ‘எதிர்நீச்சல்’, ‘சிங்கப் பெண்ணே’, ‘வானத்தைப் போல’, ‘கயல்’ போன்ற சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.அந்த வகையில் ரசிகர்களின் ஆதரவு பெற்ற ஒரு தொடராக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ‘மலர்’ சீரியல். இதில் கதாநாயகியாக ப்ரீத்தி ஷர்மாவும், கதாநாயகனாக அக்னியும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்னி சீரியலில் இருந்து விலகி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில் அவர், “திடீரென தனக்கு காயம் ஏற்பட்டு விட்டது.


நான் திருப்பி குணமடைய காலம் எடுக்கும் என்பதாலும், இந்த சீரியல் நன்றாக போக வேண்டும் என்பதாலும் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். இது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். சன் டிவி மற்றும் விஷன் டைம் குழுவினருக்கு மிக்க நன்றி. தன்னுடைய பார்வையாளர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் நன்றி. அர்ஜுன் கதாபாத்திரத்தை நிரப்பும், புதிய அர்ஜுனுக்கும் நீங்கள் இதேபோல தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். நன்றி. நல்லதே நடக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார். திடீரென சீரியலை விட்டு அக்னி விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்