காவேரியை கொண்டாடி தீர்க்கும் கிராம மக்கள்..! வாயை பிளந்து பார்க்கும் விஜய்.! ‘மகாநதி’ ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது கொடைக்கானலுக்கு செல்லும் காவேரியை மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர். காவேரிக்கு கிடைக்கும் இந்த வரவேற்பை பார்த்த விஜய் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மேலும் காவிரி கிராமத்தில் நடக்கும் போட்டியில் பங்கெடுத்து கொள்கிறார். இதை பார்த்த விஜய் அதிர்ச்சியில் வாயை பிளந்து நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரியை கொண்டாடி தீர்க்கும் கிராம மக்கள்..! வாயை பிளந்து பார்க்கும் விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ இதோ.! 1
‘மகாநதி’ சீரியலில் தற்போது விஜய்யும் காவேரியும் ஒன்றாக இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். விஜய் ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவேரியை திருமணம் செய்து கொண்டிருந்த போதிலும், தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் விஜயின் தாத்தா காவிரியை ஹனிமூனுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். ஆனால் காவேரி தான் வாழ்ந்த கொடைக்கானலுக்கே செல்ல வேண்டும் என்று கூற, விஜயும் காவேரியும் தற்போது கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அங்கு கிராமத்தில் நடக்கும் போட்டி ஒன்றில் காவேரி கலந்து கொள்கிறார். மரம் ஏறி பரிசையும் வெல்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கல்யாண மண்டபம்ன்னு நினைச்சிட்டு வந்தியா? English-ல் பேசி பாக்யாவை அசிங்கப்படுத்திய ராதிகா.!

காவேரியை கொண்டாடி தீர்க்கும் கிராம மக்கள்..! வாயை பிளந்து பார்க்கும் விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ இதோ.! 3
இதை பார்த்து விஜய் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின்னர் இருவரும் இரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு மிகவும் குளிருவதாக காவேரி கூறுகிறார். அப்போது ஒயின் குடிக்கிறியா? என்று காவேரிக்கு விஜய் ஒயின் கொடுக்கிறார். ஒயினை குடித்துவிட்டு காவேரி குத்தாட்டம் போட தொடங்குகிறார். இதனால் விஜய்க்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. காவிரியை கட்டுப்படுத்த முடியாமல் விஜய் திணறிக் கொண்டிருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment