எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார்ன்னு கூப்பிடனும்? நயன்தாராவை குறிப்பிட்டு சொன்னாரா மாளவிகா? இணையத்தில் எழுந்த எதிர்ப்பு.!

வெளியிட்டது

லேடி சூப்பர் ஸ்டார் என்று ஏன் சொல்ல வேண்டும்? என்று மீண்டும் மாளவிகா மோகனின் நயன்தாராவை வம்பிழுத்திருக்கிறார். ஏற்கனவே மாளவிகா நயன்தாரா பற்றி பேசியிருந்தது சர்ச்சையான நிலையில் தற்போது மீண்டும் நயன்தாராவை வம்பிழுத்து பேசியிருக்கிறார் மாளவிகா. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த மாளவிகா மோகனன், நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல், மருத்துவமனையில் ஒரு நடிகை அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிக்கிறார். ஆனால் அங்கும் அவர் முழு மேக்கபுடன் நடித்திருந்தார் என்று தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இது நயன்தாராவை தான் இப்படி மறைமுகமாக மாளவிகா விமர்சித்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால் ராஜா ராணி படத்தின் ஒரு காட்சியின் நயன்தாரா அவ்வாறு நடித்திருந்ததார். அதை குறிப்பிட்டுத் தான் மாளவிகா இப்படி விமர்சனம் செய்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நயன்தாராவும் பதிலடி கொடுத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார்ன்னு கூப்பிடனும்? நயன்தாராவை குறிப்பிட்டு சொன்னாரா மாளவிகா? இணையத்தில் எழுந்த எதிர்ப்பு.! 1
நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் கனெக்ட் படம் வெளியாகியிருந்தது. இந்த படக் குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நயன்தாரா, ஒரு நடிகை தன்னைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், மருத்துவமனையில் இருக்கும் காட்சியில் கூட மேக்கப் போட்டு தான் நடித்து இருந்ததாக கூறியிருந்தார். அதற்காக முடி எல்லாம் விரித்து போட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யதார்த்த படத்திற்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எதார்த்த படங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடித்தால் போதும். என் இயக்குனர் இவ்வளவு சோகம் வேண்டாம் என்று தன்னை அப்படி நடிக்க வைத்தார் என்று விளக்கம் அளித்து இருந்தார். நயன்தாராவும் மாளவிகாவின் பெயரை குறிப்பிடாமலே அவ்வாறு பேசியிருந்தார். மேலும் தான் எது செய்தாலும் அது தவறாக இருக்கிறது. ஒல்லியாக இருந்தால் மிக ஒல்லியாக இருக்கிறீர்கள் என்கிறார்கள். குண்டாக இருந்தால் என்ன இவ்வளவு குண்டாக இருக்கிறார்கள் என்கிறார்கள். எனவே விமர்சனங்களை வைப்பவர்கள் வைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்று மாளவிகாவிற்கு நயன்தாரா பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது மாளவிகா மோகனன் மலையாளத்தில் கிறிஸ்டி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக மலையாள சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்த அவர், மீண்டும் நயன்தாராவை மீண்டும் சீண்டும் விதமாக பேசியிருந்தார். அந்தப் பேட்டியில் மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அவர் உண்மையாகவே லேடி சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டுமே அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார் தான். அதுமாதிரி அவர்களை அழைத்தால் போதுமே என்று குறிப்பிட்டு இருக்கிறார். நயன்தாரா சோலவாக நடிக்கும் திரைப்படங்களின் டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் இடம் பெறுவது வழக்கமாக இருக்கிறது் அதை குறிப்பிட்டு தான் இது போல மாளவிகா பேசியிருக்கிறார் என்று தற்போது நயன்தாராவின் ரசிகர்கள் தங்களது ஆதகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்களும் நன்றாக நடியுங்கள், அதை விட்டுவிட்டு நயன்தாரா மீது இப்படி காழ்ப்புணர்ச்சி கொள்கிறீர்களே? இன்னுமா உங்களுக்கு நயன்தாரா மீது பொறாமை போகவில்லை? என்ற விதத்தில் மாளவிகாவிடம் நயன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits : RED MALAYALAM

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்