Categories: சினிமா

மம்மூட்டியின் 72வது பிறந்தநாள்.! ‘பிரம்மயுகம்’ போஸ்டரை பகிர்ந்து வாழ்த்திய படக்குழு.!

வெளியிட்டது

மலையாளத் திரையுலகின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மம்முட்டி. அவரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படத்தின் முதல் பார்வையை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘பூதகாலம்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய ராகுல் சதாசிவம் இயக்கும் திரைப்படம் தான் ‘பிரம்மயுகம்’. இந்த படத்தில் மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்டபலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

மம்மூட்டியின் 72வது பிறந்தநாள்.! 'பிரம்மயுகம்' போஸ்டரை பகிர்ந்து வாழ்த்திய படக்குழு.! 1
இந்தப் படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் தோற்றத்தை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறனர். அதில் சட்டை இல்லாமல் சிரித்த முகத்துடன் வில்லன் லுக்கில் அவர் அமர்ந்திருக்கும் தோற்றத்தை முதல் பார்வையாக தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கறை படிந்த பற்கள், வில்லத்தனமான, நாற்காலியில் சிரிப்பு அமர்ந்திருக்கும் தோற்றம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது சிறந்த வில்லனாக மம்முட்டி நடித்துள்ளாரோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மம்முட்டியின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக தற்போது போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த போஸ்டரை பார்த்த பின்பு ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயக்குக்கு பதிலாக மம்முட்டியை நடிக்க வைத்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என்று சொல்லி ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்