சீரியல்களுக்கு பெயர் எடுத்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான். அப்படி பல வெற்றி சீரியல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் டிவி. அந்த வரிசையில் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி. இந்த சீரியலில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ். இந்த தொடரில் இருவரும் ஜோடியாகவே நடித்து இறுதியில் ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடி ஆகி உள்ளனர்.

பின்னர் இந்த தொடரின் 2வது சீசன் ஒளிபரப்பாகியது. இந்த தொடரில் நாயகனாக சித்து நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மீண்டும் ஆல்யா மானசா நடித்து உள்ளார். ஆனால் பாதியிலேயே ஆல்யா மானசா தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக இந்த தொடரில் வேறு நடிகை போடப்பட்டது. பின்னர் அவரையும் மாற்றி தொடரை குழப்பமாக்கி விட்டனர்.

இந்நிலையில் தற்போது ராஜா ராணி 3 சீரியல் மீண்டும் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் நாயகன் மற்றும் நாயகியாக மீண்டும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆல்யா மானசாவே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.