குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பரியங்கா இடையே வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் மணிமேகலை மீது தவறு இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் பிரியங்கா ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், பிரியங்கா செய்த தவரைப்பற்றி மட்டும் பேசினால் போதும், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பேச வேண்டாம் என கூறி உள்ளார். மேலும் கூட இருந்தே தனக்கு எதிராக பேசும் கோமாளிகளை பார்த்து, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என கடுமையாக சாடியுள்ளார்.

இப்படி இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மணிமேகலை உடன் சண்டைக்கு பிறகு பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், நான் வாழ்வில் கண்ட காயங்கள் எல்லாம் மறைந்துவிட்டது.என் வளர்ச்சிக்கு ஒவ்வொரு துளி கண்ணீரும் உதவியது.நான் எழுதுவது எனக்காக மட்டும் இல்லை, என் கனவுகளை நோக்கி, ஒளியையும் நோக்கி செல்கிறேன் என கூறி உள்ளார்.
View this post on Instagram
விளம்பரம்