சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்று இருந்தது.

இந்நிலையில், இப்படம் மொத்தமாக ரூ . 455 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது இருக்கிறது. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது படம் கூடுதலாக 55 கோடி ரூபாயை லாபம் பெற்று கொடுத்துள்ளது. நாளை வேட்டையன் படம் வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் படத்தின் லாபத்தை அறிவித்துள்ளது. சவால் விடுகிறாரா என்ற அச்சத்தை கிளப்பி உள்ளது .
View this post on Instagram