Categories: அரசியல்

பிரதமராக தன்னை முன்னிறுத்தி கொள்ளும் மம்தா பானர்ஜீ!!

வெளியிட்டது

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. தொடர்ந்து இரண்டு முறை தோற்றுள்ள காங்கிரஸ் அணி இந்த 2024ஆம் தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்படும் என சிந்திப்பதற்கும், சிந்தனை அமர்வு என்ற தலைப்பில் ராஜஸ்தானில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். அதில் வரும் தேர்தலில் ஆளும் பா.ஜ.கவிற்கு எதிராக வலுவான ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது.

இந்நிலையில்  “India Wants Mamata Di” என்ற ட்விட்டர் கணக்கும், புதிய வலைத்தளமும் உருவாக்கப்பட்டு பிரதமராக மம்தா பானர்ஜீயை முன் நிறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மம்தா இப்போது மேற்கு வங்காள முதல்வராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து மத்திய பா.ஜ.கவை விமர்சித்தி வருவதாலும், காங்கிரஸில் முன் நிறுத்த கூடிய முக்கிய தலைமை இல்லாத காரணத்தால் கூட்டணி ஆட்சி கொள்கை அடிப்படியில் மமதாவை முன்னிறுத்தும் முனைப்பில் திரிணாமூல்  காங்கிரஸ் இறங்கியுள்ளது.

இன்னும் யாரும் முடிவு செய்யப்படாத நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் இப்படி செய்வது உண்மையில் பா.ஜ.கவிற்கு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளுக்கு தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளார் மம்தா பானர்ஜீ.  எந்த மாநில கட்சியும் நேரடியாக அறிவிக்காத போதிலும், காங்கிரஸ் கூட்டணிக்கு இது அழுத்தத்தை கொடுத்துள்ளது.

பா.ஜ.கவை இந்த தேர்தலில் எதற்கும் முக்கிய தலைவரான மம்தாவின் இந்த செயல் அவர்களுக்கு பின்னடைவாக அமைய கூடும் என அரசியலை விமர்சனர்கள் கூறியுள்ளனர். 40 ஆண்டு காலம் அரசியல் களத்தில் இருக்கும் மம்தா பானர்ஜீ நல்ல அரசியல் ஆளுமை என்றாலும் அவசரப்படுவது தவறாக பொய் முடியவும் வாய்ப்புள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்