தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் டயானா குரியன். ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் தனது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் திரை உலகில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். 2005ம் ஆண்டு வெளியான ஐயா என்னும் படம் மூலம் அறிமுகமான இவர், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் O2 (ஆக்ஸிஜன்). இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ஜி.கே.விஷ்ணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யூடியூப் சேனலில் காமெடி வீடியோக்கள் வெளியிடும் சிறுவன் ரித்விக் நடிக்கிறான். இந்த படத்தை திரையில் வெளியிட போவதில்லை. மாறாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் டீசர் உள்ளது. Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

2020ல் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படமும் திரையில் வெளியாகாமல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. அடுத்தபடியாக நயன்தாராவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமான நெற்றிக்கண்ணும் ஹாட்ஸ்டாரிலேயே வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியான போதும், நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கதாநாயகியை மையமாக வைத்து அவர் நடிக்கும் O2 படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அந்த. டீசரை நீங்களும் காண…Watch Official Teaser below..