பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேபாளம் பயணம். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவை சந்திக்க உள்ளார்.

நேபாளத்திலுள்ள புத்தர் பிறந்த லும்பினி நகரில் நடைபெறவுள்ள புத்த ஜெயந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்க  பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேபாளம் 5வது முறையாக செல்கிறார்.

லும்பினி நகரிலுள்ள மாயாதேவி ஆலயத்தில் அவர் வழிபாடு நடத்த உள்ளார். பின்னர் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் புத்தர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கொள்கிறார்.

விளம்பரம்

மேலும், சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு சொந்தமான நிலத்தில், புத்தர் கலாச்சார மையம் கட்டுவதற்காக அடிகல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார். பின்னர் நேபாள பிரதமர் திரு.ஷேர் பகதூர் தியூபாவை சந்தித்து இருநாட்டு உறவு குறித்தும் பேசவுள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேபாளம் பயணம். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவை சந்திக்க உள்ளார். 1

விளம்பரம்

இது குறித்து பேசியுள்ள திரு.மோடி “பிரதமர் திரு.ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் நேபாளம் செல்ல இருப்பதாகவும், புத்த ஜெயந்தி தினமான இன்று லும்பினியாவில் உள்ள கோவிலில் பிராத்தனை மேற்கொள்ளவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் புத்தர் பிறந்தநாளில் இந்தியர்கள் பலரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். அந்த வழியில் தானும் பயணம் இந்த புனித பயணம் மேற்கொள்வது தனக்கு பெருமையாகவும், சிறப்பாக உணர்வதாகவும் பிரதமர் திரு.மோடி கருத்து தெரிவித்துளளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment