விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதில் பங்கேற்ற பலரும் பிண்ணனி பாடகர்களாக வலம் வருகின்றனர். சிலருக்கு டி.இமான் தன் படங்களில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா, தனது குழுவில் பாடுவதற்கு பலருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது சீனியர், ஜீனியர் என்று எட்டு சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மறைந்த எஸ்பிபி, சின்னக்குயில் சித்ரா, எஸ்பிபி யின் மகன் சரண், சங்கர் மகாதேவன், கல்பனா போன்ற பலர் வெகு வருடங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான் இவர்கள் இருவரும் மிக காமெடியாக இந்த நிகழ்ச்சியை நடத்தி செல்வதால் இது இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று சொல்லலாம். சூப்பர் சிங்கர் 8ன் ஜூனியர் இறுதி போட்டி சமீபத்தில் தான் முடிந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இவ்வாறு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல மணங்களை வென்றவர் தான் மானசி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் 8-ல் போட்டியாளராக களம் இறங்கினார். தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மேலும் பாடுவது மட்டுமில்லாமல் நடனத்திலும் அவர் சிறப்பான பயிற்சி பெற்றவராக இருந்தார். இவ்வாறாக தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மானசிக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கூட கிடைத்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு படத்தில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் பாடகியாக களமிறங்கி இருக்கிறார் மானசி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மானசி அவ்வப்போது புகைப்படங்களையும், தான் பாடும் ஆல்பம் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் ஆர்கெஸ்ட்ராவில் பியோனா வாசிக்கும் கார்த்திக் தேவராஜ் பிறந்தநாளை ஒட்டி அவரது வீட்டிற்கு சென்று அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருந்தார் மானசி. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் வரும் ட்ரெண்டிங் பாடலான மேகம் கருக்காதா பாடலுக்கு ஸ்ரீதர் தேவசேனாவுடன் இணைந்து நடனமாடி, அதை வெளியிட்டு இருக்கிறார். சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னரான ஸ்ரீதர் தேவசேனாவும் மானசியும் நல்ல நண்பர்கள், ஸ்ரீதரை மான்சி அண்ணன் என்றே அழைப்பார். இருவரும் சேர்ந்து செய்துள்ள இந்த ரீல்ஸ் வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..