கோபிக்கு கண்கலங்கி நன்றி சொன்ன பாக்யா.! நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபியும் பாக்கியாவும் தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேசிக் கொள்கின்றனர். பாக்யாவும் கோபியும் சமரசமாகி விட்டதாகவே தற்போது தெரியவருகிறது. ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி பாக்கியாவிற்கு துரோகம் செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். தற்பொழுது கதைப்படி கோபி – ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு வந்து வசித்து வருகின்றனர். தன் கணவர் செய்த துரோகத்தை தாங்க முடியாத பாக்யா இத்தனை நாட்களாக கோபியின் முகத்தில் கூட முழிக்காமல் வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபிக்கு கண்கலங்கி நன்றி சொன்ன பாக்யா.! நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல ப்ரோமோ..! 1
இந்த நிலையில் பாக்யாவின் இளைய மகனாக இருக்கும் எழிலின் திருமண வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் இறந்து விட்டதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர் தற்போது திடீரென கதையில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். தற்போது அமிர்தாவை தன்னுடன் வந்து வாழுமாறு அவர் அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அமிர்தாவிற்கு கணேஷுடன் வாழ விருப்பமில்லை. இந்த நிலையில் எழிலின் வீட்டை தேடி வரும் கணேஷ் எழிலிடம் அமிர்தாவை அனுப்பி வைக்குமாறு பிரச்சனை செய்கிறார். ஆனால் ஒரு தந்தையாக இருந்து கோபி கணேஷை வீட்டில் இருந்து அடித்து துரத்தி நிலைமையை சீர் செய்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முடிவுக்கு வருகிறதா ஹேமாவின் கதை.? லாரியில் ஏற்றி ஹேமாவை அனுப்பிவிட்ட ரவுடிகள்.!

கோபிக்கு கண்கலங்கி நன்றி சொன்ன பாக்யா.! நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல ப்ரோமோ..! 3
இதனால் மனம் நெகிழ்ந்து போன பாக்கியா, தற்போது கோபியிடம் நன்றி தெரிவிக்கிறார். கோபியும் பதிலுக்கு நம் எழிலுக்கு திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது. நீ தைரியமாக இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் சொல்லி அனுப்புகிறார். பாக்கியா கோபி நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேசிக் கொள்கின்றனர். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Belo Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment