Categories: சினிமா

மணிரத்னத்தினம் திரை கதை எழுதிய வானம் காட்டட்டும் படம்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

வெளியிட்டது
மணிரத்னத்தினம் திரை கதை எழுதிய வானம் காட்டட்டும் படம்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!! 1

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிற படம் வானம் கொட்டட்டும்.இப்படத்திற்கு மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குநர் தனா இயக்கி வருகிறார் . இவர் ஏற்கனவே மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று டைட்டில் லுக் வெளியான நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், அப்பா, அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு மற்றும் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது போஸ்டர் மூலம் அறிய முடிகிறது.

படத்துடன் படப்பிடிப்பு சென்னை, குற்றாலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஃபேமிலி டிராமா படமாக உருவாகும். இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதுவரை சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வரும் 15ம் தேதி வெளியிட இருக்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்