10 ஆண்டிற்கு பிறகு வைகையில் கரைபுரண்டு ஓடும் நீர்! ராமநாதபுரம் மாவட்டம் கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!!

10 ஆண்டிற்கு பிறகு வைகையில் கரைபுரண்டு ஓடும் நீர்! ராமநாதபுரம் மாவட்டம் கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!! 1

கடந்த 2008- ஆம் ஆண்டிற்கு பிறகு வைகை அணையில் இருந்து ஆற்றில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது பார்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீருக்கே பற்றாத நிலையில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஓரளவு நல்ல மழை பெய்ததால் பெரியாறு பாசனக்கால்வாய் பகுதியில் இரு போகம் விவசாயம் செழிப்பாக நடந்தது. ஆனால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

விளம்பரம்

இந்த இரு மாவட்டங்களில் வைகை தண்ணீரை கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடந்த ஆண்டுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கண்மாய்கள் வறட்சிக்கு இலக்காகின. அதனால், வைகை அணை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அது நிறைவடையாமல் குடிநீருக்காக கட்டிய அணை போல் தோன்றியது.

வைகை ஆற்றில் கடந்த காலங்களில் ஆண்டுமுழுவதும் பெரும்பாலான நாட்களில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வைகை ஆற்றில் வைகை அணையில் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் வரும்நிலை ஏற்பட்டு விட்டது. அதுவும், குடிநீருக்காகவும், சித்திரைத் திருவிழாவுக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அதனால், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வைகை ஆறு வறட்சிக்கு இலக்காகிவிட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்! இந்திய வானிலை மையம்!!

இந்த நிலையில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்பாகவே பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் ஒரளவு தென் மேற்கு பருவமழை பெய்ததால் பெரியாறு அணைக்கும், வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது வந்தது. அதனால், வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெற்கதிர் சாகுபடி அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 9-ம் தேதி ராமநாதபரம் பாசனத்திற்காகவும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால், வைகை அணையில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விளம்பரம்

இதுகுறித்து வைகை பெரியாறு வடிநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘வைகை அணையில் வைகை பங்கிட்டு தண்ணீர் அடிப்படையில் 1,500 மில்லியன் கன அடிக்கு மேல் இருந்தால் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் அனுமதித்தால் உடனே திறக்கலாம்.

தற்போது வைகை அணையில் 2,300 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10 ஆண்டிற்கு தற்போதுதான் முதல் முறையாக விவசாய பாசனத்திற்கு 2,500 கன அடி தண்ணீர் திறந்துவிட்டப்பட்டுள்ளது. இயல்பாக மழை தண்ணீரும் சேர்ந்து வருவதால் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் வருகிறது என்றார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment