கணவன் பிறந்தநாளுக்காக BMW பைக் பரிசளித்த மணிமேகலை.. மாஸ் பண்றீங்களே மணிமேகலை

வெளியிட்டது

யூடியூப்பில் மிக ரெண்டான ஜோடிகளில் ஒருவர்தான் மணிமேகலை மற்றும் ஹூசைன். சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்தான் விஜே மணிமேலை. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அப்போது ஒரு நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அதில் நடன இயக்குனராக இருந்த ஹூசைனை பார்த்தவுடன் காதல் வந்துவிட்டது. இதனால் ஹைதராபாத் வரை போய் அவரை தேடிக் கண்டுபிடித்து காதலை வெளிப்படுத்தினார். ஆனால் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2017ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீடியோ கீழே உள்ளது.

கணவன் பிறந்தநாளுக்காக BMW பைக் பரிசளித்த மணிமேகலை.. மாஸ் பண்றீங்களே மணிமேகலை 1

பின்னர் சன்டிவியில் இருந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் மணிமேகலை. இதன் பின்னர் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்ப்பட்டது. அவருடைய காமெடி திறன் அவரை மென்மேலும் வளர செய்தது. லாக்டவுன் சமயத்தில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி Vlogs செய்யத் தொடங்கினர் இருவரும். இதன் மூலம் அவர்களுக்கு 1.5மில்லியன் Subscribers கிடைத்தனர். இதில் இவர்கள் இருவரும் செய்யும் குறும்புகளை பதிவேற்றி வருகின்றனர். பார்க்கவே செம்ம காமெடியாக இருக்கும். திருமணம் ஆன புதிதில் வீட்டில் ஆதரவு இல்லாத காரணத்தால் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர் இருவரும்.

ஆனால் தற்போது தங்களை வாழவிடாமல் செய்தவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி சம்பாதித்து வருகின்றனர். ஏற்கனவே BMW கார் வாங்கியிருந்த நிலையில் தற்போது BMW ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த பைக்கை மணிமேகலை ஹூசைன் பிறந்த நாளுக்காக வாங்கி பரிசளித்துள்ளார். தற்போது அதையும் Vlog ஆக யூடியுப்பில் பதிவேற்றியுள்ளார் மணிமேகலை. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Video Courtesy: Hussain Manimegalai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்