ரம்ஜானுக்கு கிராமத்து நண்பர்களுக்கு சுட சுட பிரியாணி செய்து விருந்து வைத்த மணிமேகலை.!

வெளியிட்டது

தங்களது ஊரில் இருக்கும் நண்பர்களுக்காக ஹூசேன் மற்றும் மணிமேகலை தம்பதிகள் தற்போது ரம்ஜானுக்கு பிரியாணி செய்து அவர்களுக்கு விருந்து அளித்திருக்கின்றனர். அந்த வீடியோவை அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே மணிமேகலை. இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். அப்படி ஒரு முறை நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது அதில் கோரியோகிராஃபராக இருந்த ஹூசைன் மீது காதலில் விழுந்தார். பின்னர் ஹூசைனை தேடி ஹைதராபாத் வரை சென்று அவர் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மணிமேகலையின் குடும்பத்தில் ஒப்புதல் தரவில்லை. இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஹூசைனை கரம் பிடித்தார் மணிமேகலை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரம்ஜானுக்கு கிராமத்து நண்பர்களுக்கு சுட சுட பிரியாணி செய்து விருந்து வைத்த மணிமேகலை.! 1
இரண்டு பேரும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்க்கையை தொடங்கிய அவர்கள், தங்களது கடுமையான முயற்சியால் இன்று முன்னேறி சொந்த வீடு, சொந்த நிலம், கார் பைக் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வாழவே கூடாது என்று நினைத்த பலரின் முன்னிலையிலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த தம்பதிகள். இதனால் தான் என்னவோ இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் மிக அதிகமாக இருக்கின்றனர். ஹூசைன் மணிமேகலை என்னும் youtube சேனல் ஒன்றை தொடங்கி இருக்கும் அவர்கள் அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட அவர்கள் வாங்கியிருந்த ஹெச் எம் லேண்ட் என்கிற நிலத்தின் பூமி பூஜை வீடியோவை பகிர்ந்து இருந்தனர். பலரும் அந்த வீடியோவிற்கு கீழே உங்களது கடின உழைப்பு வீண் போகவில்லை. இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி இருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.


அதில் தங்களது சொந்த ஊரில் இருக்கும் நண்பர்களுக்காக அவர்கள் ரம்ஜானுக்கு பிரியாணி செய்து அதை அனைவருடனும் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Hussain and Manimegalai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்